
எழுத்தாளர் -செ.யோகநாதன்
ஈழத்தின் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கியவர்களில் பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் அவர்களும் குறிப்பிடத்தக்கவராவார். யாழ்ப்பாணம் நல்லூரடியைச் சேர்ந்த மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரான இவர் பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியுமாவார்
பட்டப் படிப்புக்களை முடித்துக்கொண்ட யோகநாதன் அவர்கள் மட்டக்களப்பு, பூனகரி, ஆகிய பிரதேசங்களில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி இருக்கின்றார்
நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளென பல்வேறு படைப்பிலக்கியங்களை வெளிக்கொணர்ந்த யோகநாதன் அவர்களுக்கு இரண்டு தடவைகள் இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்திருக்கின்றன. அது மாத்திரமல்ல தமிழக அரசிடமிருந்தும் பல பரிசுகளைப் பெற்ற இவர் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியாலும் பாராட்டப் பட்டவராவார்.
தனது அறுபத்தைந்தாவது வயதில் மாரடைப்பினால் காலமான இவர் தனது வாழ்நாளில் எண்பத்தினான்கு புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்!