மேடை வானொலி சினிமா நடிகர். இயக்குனர். நாடக பிரதித் தயாரிப்பாளர்
பிறப்பு:- யேசுமனை இளவாலை – ஈழம்
வாழ்ந்துகொண்டிருப்பது – பிறான்ஸ்
தொலைபேசி :- 00 33 1 39870838
முகத்தார் அவர்கள் 1966 முதல் 1998 வரை இலங்கை வானொலியில் பகுதி நேரப்பணியாளராக கடமையாற்றியிருக்கின்றார். இவர் எழுதி நடித்து நெறியாள்கை செய்த ‘முகத்தார் வீடு” என்னும் வானொலி நாடகம் இலங்கை வானொலியில் 268 வாரங்கள்.ஒலிபரப்பாகி ஒரு சாதனையே படைத்திருக்கின்றது! இது தவிர ‘பருவக்காற்று” என்னும் நாடகம் 52 வாரங்களும் இவை தவிர 123 தனி நாடகங்களும் ஒலிபரப்பாகியிருக்கின்றன.
இலங்கையில் தயாரான வாடைக்காற்று கோமாளிகள் ஏமாளிகள் போன்ற திரைப்படங்களிலும் பாரிசில் தயாரிக்கப்பட்ட பல சின்னத் திரைப்படங்களிலும் நடித்திருப்பதோடு பாரிசில் இருந்து ஒலிபரப்பான வானொலியிலும் வானொலிக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றி இவ் வானொலிகளில் ஜம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை தயாரித்து வழங்கியிருக்கின்றார்.
இவர் நடித்த மேடை நாடகங்களில் சண்டியன் சின்னத்தம்பி லண்டன் மாப்பிள்ளை மாடிவீட்டு மரிக்கொழுந்து தணியாத தாகம் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
தனது நாடகங்களில் பன்னிரண்டு நாடகங்களைத் தொகுத்து ‘முகத்தார் வீட்டுப் பொங்கல்” என்னும் பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ள முகத்தார் அவர்களுக்கு வாடைக்காற்று திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 1979ல் ஜனாதிபதி விருது உட்பட பத்திற்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ள போதும் ‘முகத்தார்” என்னும் பெயரே சிறப்பு விருதாக இவருடைய பெயருடன் இணைந்திருக்கின்றது.
———————————————————————————————————————————