தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

சிவஞானசுந்தரம்

வானொலி மேடை திரைப்பட நடிகர் – எழுத்தாளர் பிறப்பு – யாழ்ப்பாணம் – தமிழீழம்

கலைப் படைப்புகள் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லலாம் என்பதை செயலில் காட்டியவர் அமரர் சிவஞானசுந்தரம் அவர்கள். நந்தி என்னும் புனைபெயரில் எழுத ஆரம்பித்த இவருக்கு அந்தப் பெயரே நிரந்தரமாகிக்கொண்டது.  இலக்கியம் ஆன்மீகம் மருத்துவம் நாவ‌ல்கள் என பல துறைகளிலுமாக மொத்தம் பதினாறு நூல்களை எழுதி தனது எழுத்துப்பணியை விரிவுபடுத்த இவரது படைப்புகள் இலங்கையையும் கடந்து தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. எழுத்தாளர் நந்தியின் பணியை இலக்கி உலகம் மறந்துவிடமுடியாத அளவிற்கு தன்னுடைய எழுத்துக்களை பதிவு செய்து வைத்திருக்கும் சிவஞானசுந்தரம் அவர்கள் மூன்று தலைமுறை சார்ந்த எழுத்தாளர்களுடன் சோர்வின்றி தொடர்ந்து எழுதிவந்தவர்.

யாழ் மாந‌கரசபையின் ஆணையாளராக இருந்த இவர் தம்மிடம் இருந்த பல்வேறுபட்ட பரிமாணங்களை காலத்திற்குக் காலம் நவீனமயப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கின்றார். இவரது க‌லைப்ப டைப்புகளில் ‘கண்ணாடி” ‘குரங்குகள்” ஆகிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை. இலங்கை வானொலியிலும் பல விழிப்புணர்வு நாடகங்களை தயாரித்து வழங்கியிருந்ததோடு இலங்கையில் தயாரான ‘பொன்மணி” என்னும் திரைப்படத்திலும் வேறு சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருந்த திரு. சிவஞானசுந்தரம் அவர்கள் 15.06.2005ல் யாழ்ப்பாணத்தில் அமரத்துவம் அடைந்துள்ளார்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud