தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

ம . சண்முகலிங்கம்

நடிகர் நாடக எழுத்தாளர் – நாடகப் பயிற்சியாளர் – கலாநிதி  குழந்தை  ம . சண்முகலிங்கம்

ஈழத்து நாடக வரலாற்றில் மிகவும் முக்கியமானவர்களில் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களும் ஒருவர். இவர் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக் கழகத்தில் கற்று முப்பது வருட காலமாக அதே பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருப்பதாக அறிகின்றோம். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. இவர் தனது இன்னொரு பணியாக உலகப் பிரிசித்திபெற்ற நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ். இப்சன். அன்ரன்-கொக்கோவ். பேட்டல்-பிரக்சட். தாகூர். ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்தமையாகும். அத்துடன் யப்பானிய நாடகங்கள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.

1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லலூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.

1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் அவர்களின் வாழ்வியல் அவலங்களையும் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் ராணுவ அடக்குமுறை பெண்களுக்கெதிரான அடக்குமுறை மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை சாதிய அடக்குமுறை சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

வெகுஜன ஊடகங்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்ட காலத்தில்க்கூட இவரின் நாடகங்கள் பேசாப்பொருள் பற்றிப் பேசியிருந்தன. இவர் எழுதி இயக்கிய ‘மண் சுமந்த மேனியர்” என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான ‘அன்னை இட்ட தீ” ‘எந்தையும் தாயும்” ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை.

ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர் சிறுவர் நாடகங்களுக்கும் பாடசாலை நாடகங்களுக்கும் ஆற்றிய பணி அளப்பரியது. நாற்பது வருடகாலமாக நாடகத்துறைக்கு அரும்பணி ஆற்றிவரும் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களுக்கு கிழக்குப் பல்கலைக் கழகம் கலாநிதி பட்டம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கமையாகும்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud