தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

எஸ் . எஸ் . கணேசபிள்ளை

கலைத்தென்றல் -வரணியூரான் எஸ்.எஸ்.கணேசபிள்ளை
வானொலி மேடை நடிகர். நெறியாளர். நாடக எழுத்தாளர்

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற நகரங்களில் ஒன்று சாவகச்சேரி. அந்த நகருக்குள் நுளைந்தால் வருகின்றது நுணாவில். நுணாவிலில் ஒரு சிறு பகுதிதான் வரணி! அந்த சிறுகிராமத்தில் பிறந்த கணேசபிள்ளை என்ற இந்தக் கலைஞன் தனது பெயரை வரணியூரான் என புனைபெயராக்கிக் கொண்டதனால் இலங்கையில் எந்தப் பகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் வரணி என்ற அந்தச் சிறு கிராமத்தின் பெயர் தெரிந்திருக்கலாயிற்று.

வரணியூரான் அவர்களின் ‘இரைதேடும் பறவைகள்” என்ற நாடகம் இலங்கை வானொலியில் ஜம்பத்திரண்டு வாரங்கள் ஒலிபரப்பாகி ஏராளமான வானொலி நேயர்களின் பாட்டுக்களைப் பெற்ற நாடகமாகும்.

இவர் எழுதி மேடையேற்றிய அசட்டு மாப்பிள்ளை, ஆசை மச்சான், கறுப்பும் சிவப்பும், போன்ற நாடகங்களில் நடித்த முகத்தார் யேசுரட்ணம் அவர்களுக்கும் வரணியூரானால் பெரும் புக‌ழ் கிடைத்தது என்று முகத்தார் அவர்களே கூறியிருக்கின்றார். வரணியூரானின் இன்னொரு புகழ் பெற்ற நாடகம் ‘புழுகர் பொன்னையா” ஆகும். இந்த நாடகம் இலங்கையின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டு இவருக்குப் பெரும் புகழைத் தேடிக்கொடுத்தது.

1937ல் பிறந்த கணேசபிள்ளை அவர்கள் இறைவரித் திணைக்களத்தில் கடமையாற்றியபடியே கலைப்பணியும் ஆற்றிவந்தார். தனது ஜம்பத்தெட்டாவது வயதில் (30-08-1995) அகால மரணம் அடைந்தார் என்பது வேதனையான விடயம்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud