தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

க. இந்திரகுமார்

மனநல மருத்துவர் அமரர் க. இந்திரகுமார் மருத்துவர் நடிகர் எழுத்தாளர் பத்திரிகையாளர்.

மருத்துவத்துறைதான் இவரது பிரதான தொழில். ஆனாலும் இவருக்கு மிகவும் பிடித்தமான துறை எழுத்துத்துறைதான்! எழுதுவதிலும் ஆராய்ச்சிக்கட்டுரைகள் விஞ்ஞானக் கட்டுரைகள் மருத்துவக் கட்டுரைகள் என்று இவரது எழுத்துக்கள் எல்லாம் அறிவு சார்ந்த கட்டுரைகளாகவே அதிகமாக வெளிவந்திருக்கின்றன.

‘மண்ணில் இருந்து விண்ணுக்கு” என்ற இவரது முதுலாவது விஞ்ஞான நாவல் 1973ல் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைப் பெற்றிருக்கின்றது.

‘விண்வெளியில் வீரகாவியங்கள்” என்ற இவரின் இன்னொரு விஞ்ஞான நூலுக்கு தமிழக அரசு விருதும் பணமுடிச்சும் வழங்கிக் கௌரவித்திருந்தது. இவ் விருதினை வழங்கியவர் அன்று தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள்.

ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது ‘வயக்காரா” மாத்திரை வயது முதிர்ந்த ஆண்களையும் இளமை உணர்வுடன் வரவளைத்த இந்த மாத்திரையை உபயோகித்து மரணமடைந்தவர்களும் பலர் உண்டு! அந்த நேரத்தில் ‘வயக்காராவும் ஏனைய சிகிச்சை முறைகளும்” என்னும் மருத்துவ நூலை எழுதி அந்த மாத்திரையை உபயோகிப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாக வெளியிட்டார்.

லண்டன் இளவரசி டயானா அவர்கள் பாரிசில் ஒரு வாகன விபத்தில் இறந்தபோது டயானாவுடன் டொனி என்ற அவரது காதலனும் சேர்ந்து இறந்ததும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சித்தபோது இந்திரகுமார் அவர்கள் ‘டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?” என்ற நூலை எழுதி டயானாவின் மறுபக்கத்தையும் மக்களுக்கு எடுத்துக்காட்டியிருந்தார்.

இவை மாத்திரமல்ல எழுத்துத். துறையில் இருந்த ஆர்வம் காரணமாக ‘மேகம்” என்ற இலக்கியச் சஞ்சிகையை சில காலம் வெளியிட்டு வந்தார். பதினைந்து இதழ்கள்வரை வெளியான இச் சஞ்சிகையில் இவர் எழுதிய ஆசிரியர் தலையங்கங்க‌ளைத் தொகுத்து அந்தத் தலையங்கங்க‌ளை பிரபலமான விமர்சகர்களைக்கொண்டு விமர்சிக்க வைத்து ‘புலம்பெயர்ந்த தமிழர்களுக்கோர் அறைகூவல்” என்ற பெயரில் நூலாக்கி வெளியிட்டார்.

இந்திரகுமார் அவர்கள் ஒரு நடிகரும் ஆவார்! இலங்கையில் உருவான வாடைக்காற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கின்றார். இவருடைய துணைவியார் விஜயாம்பிகை அவர்கள் சிறந்த நடன ஆசிரியராவார்.

இத்தனை சிறப்புக்களும் உரிய டாக்டர் இந்திரகுமார் அவர்கள் கடந்த21-12-2008ல் லண்டனில் காலானார்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud