சிலோன் -சின்னையா
மேடை திரைப்பட நடிகர்
மலையகத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த கலைஞர்களில் திரு சின்னையாவும் அடங்குவார். நாடகத்துறையில் இருந்து முதல் முதலாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட நிர்மலா” என்னும் திரைப்படத்தில் சிறு பாத்திரத்தில் தோன்றிய சின்னையா அவர்கள் கலைஞர் வி.பி.கணேசன் தயாரித்த’ புதியகாற்று” திரைப்படத்தில் மிக முக்கியமான குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து புகழ் அடைந்தார்.
திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆவலினால் தமிழ்நாடு சென்றவருக்கு. அங்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை ஒரு சில படங்களில் ஓரு சில நிமிடங்கள் வந்து போகும் வாய்ப்புக்களே கிடைத்தன. நடிகர் விஜயகாந் அவர்களுடன் ஒரு படத்தில் குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்திருக்கின்றது. அங்குள்ளவர்கள் சிலோன் சின்னையா என்றே இவரை அழைப்பார்கள். அதுவே இவருக்கு பெயராக நிலைத்துக்பொண்டது.
நடிகர்திலகம் சிவாஜி கணேசனைப்போல அப்படியே நடிக்கும் திறமை உள்ள சின்னையாவின் நடிப்பைப் பார்த்து சிவாஜி கணேசன் அவர்களே பாராட்டியிருக்கின்றார்.
புகைப்படங்கள் எடுப்பதில் வல்லுநரான சின்னையா அவர்கள் தற்பொழுது லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.