தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

திரு.ஞானம் பீரிஸ்

ஐரோப்பாவில் தமிழில் முதல் சின்னத்திரைப்படம் தயாரித்தவரான -திரு.ஞானம்  பீரிஸ்

அரசியல்ப் பின்னணி! சமூகப் பின்னணி! குடும்பப் பின்னணி! இப்படி இன்னும் பல காரணங்களால் புலம்பெயர்ந்து ஜரோப்பிய நாடுகளுக்கு வந்த ஈழத் தமிழர்கள் ஏதோ வந்தோம்! உழைத்தோம்! வாழ்கின்றோம்! என்று வாழ்ந்து விடாமல் தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் தங்களது கலை, கலாச்சாரம், பண்பாடு, இவைகளைக் காப்பாற்றுவதிலும்! வளர்ப்பதிலும்! அக்கறையுடன் செயற்பட்டவர்கள் ஏராளம்பேர் இருக்கின்றார்கள்! அவர்களது முயற்சிகளினால் ஜரோப்பிய நாடுகளில் ஆலயங்கள், தமிழ்ப் பாடசாலைகள், நாட்டியக் கல்லூரிகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இப்படி இன்னும் பல இருக்கின்றன. அந்த வகையில் ஜரோப்பாவில் முதன் முதலாக தமிழில் சின்னத்திரைப்படம் எடுத்தவர் திரு.ஞானம் – பீரிஸ் அவர்கள்.

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகரான திரு.பீரிஸ் அவர்களின் ஐந்தாவது புதல்வர்தான் திருஞானம் என்னும் இயற்பெயர் கொண்ட திரு.ஞானம் பீரிஸ் அவர்கள். யாழ்ப்பாணம் சென்-பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் இளவயது முதல் தனது மனதில் தேக்கிவைத்திருந்த திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்னும் தனது தாகத்தை புலம் பெயர்ந்து பிரான்ஸ் வந்த பின்னர் ‘தனிப்புறா” என்னும் பெயரில் வீடியோ திரைப்படத்திற்கு தானே திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டார். 1982ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு வேலைகள் இரண்டாண்டுகள்வரை நடைபெற்று 1984ம் ஆண்டு வெளியானது.

இதன் பின்னர் சில வருடகால இடைவெளிக்குப் பின்னர் நமது ஈழ மண்ணில் அமைதிப் படை என்னும் பெயரில் வந்த இந்திய இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான தனது அண்ணன், தங்கை, ஆகிய இருவரின் மரணத்தையும் கருவாகவைத்து’ விடுதலைப் பாதையிலே” என்னும் இரண்டாவது சின்னத்திரைப்படத்தை உருவாக்கினார். இந்தப்படம் ஜரோப்பிய நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற ஊர்களில் எல்லாம் காண்பிக்கப்பட்டு இரண்டு தங்கப் பதக்கங்களை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

இரண்டு படங்களில் கிடைத்த வெற்றி! ஏனைய‌ கலைஞர்களின் பாராட்டுதல்! ஊக்குவிப்புகள்! இவையெல்லாம் இவரை தனது அடுத்தபடத் தயாரிப்புக்கு தூண்டியது. 1994ல் நீ ஒரு தெய்வம்” என்னும் படம் இவரது கதை வசனம் இயக்கத்தில் தயாராகி வெளியானது. இதன் மூலமாக ஐரோப்பாவில் தமிழில் முதல் சின்னத்திரைப்படம் எடுத்தவர் என்ற பெருமையையும் அதே நேரத்தில் மூன்று படங்கள் எடுத்தவர் புகளையும் பெற்ற பெருமையை திரு.ஞானம் பீரிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இடைப்பட்ட காலங்களில் கதை, கவிதைகள், இசையும் கதையும், என பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் எழுதிவந்தார். அப்படி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றைத் தொகுத்து சென்னை மணிமேகலைப் பிரசுரம் ‘கடல் கடந்த காதல்” என்னும் பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றது என்பதும்: குறிப்பிடத் தக்கது.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud