தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

டி.ஜோகராஜா

வெளிநாட்டிலும் நடிகனாகவே தொழில் புரியும் நடிகர் விநோதன் புத்தூர் டி.ஜோகராஜா

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தின் நகரங்கள் மட்டுமல்ல குக்,கிராமங்களில்க்கூட ஒவ்வொரு இரவுகளும் எங்காவது ஒரு இடத்திலாவது கலை நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்! அந்தக் காலத்தில் நாடக மன்றங்களுக்குக் குறைவே இல்லை! இந்த நாடக மன்றங்களின் தோற்றங்களிற்கும் அவைகளின் வளர்ச்சிகளுக்கும் முக்கி காரணமாக இருந்தது நாடகக் கலையை வளர்ப்பதற்காக பல அமைப்புகள் நாடகப் போட்டிகளை நடாத்தி பரிசில்களை வழங்கியதே! இப்படி பரிசில்களை வழங்கிய அமைப்புக்களில் பெறுமதி மிக்க பரிசில்களை வழங்கிய அமைப்புகளாக குரும்பசிட்டி சன்மார்க்கசபை நடாத்திய ‘ஈழகேசரி” பொன்னையா அவர்களின் நினைவான நாடகப்போட்டி, வல்வெட்டித்துறை ‘உதயசூரியன்” மன்றம் நடாத்திய நாடகப்போட்டி, மற்றும் அரியாலை, அச்சுவேலி, மானிப்பாய் போன்ற சில ஊர்களில் உள்ள சனசமூக நிலையங்களையும் குறிப்பிடலாம்.

இப்படியாக நடைபெறும் அனேகமான போட்டிகளில் புத்தூர் யோகராஜா அவர்களின் நாடகங்கள் பங்குபற்றுவதும் அவருடைய நாடகமே முதல்ப்பரிசை பெற்றுச் செல்வதும் அனேக கலைஞர்களை வியக்க வைத்திருக்கின்றது! குறிப்பாக ‘அகில இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் பேரவை” சார்பாக அமரர் ‘பல்கலைமணி” தம்பிராசா, அமரர் ‘கலைக்காவலர்” தர்மலிங்கம், எழுத்தாளர் அமரர் கே. டானியல்,  கலைஞர் நவாலியூர் நற்குணசிங்கம் ஆகியவர்களுடன் நானும் நடுவர்களில் ஒருவராக கடமையாற்றிய பல போட்டிகளில் எங்கள் அனைவர்களது தீர்ப்புகளும் திரு.ஜோகராஜா அவர்களின் நாடகங்களுக்கே கிடைத்த விந்தையும் நடந்திருக்கின்றது!

திரு.ஜோகராஜா அவர்களின் கதை வசனம் தயாரிப்பில் உருவான ‘தெய்வச்செயல்” என்னும் நாடகம் மட்டும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றிருக்கின்றது! அதேபோல் இவரது இன்னொரு நாடகமான ‘தூய உள்ளம்” மும் பல பரிசில்களைப் பெற்ற நாடகமாகும்

யாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டு புலம் பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இவர் அங்கும் ஒரு டெனிஸ் கலை மன்றத்தில் நடிகனாகவே தொழில் புரிந்து வருகின்றார்!

தாயகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வந்த நமது கலைஞர்களில் வெளிநாட்டிலும் கலைஞனாகவே தொழில் புரிந்துவரும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் நண்பர் ஜோகராஜ் அவர்களும் ஒருவர்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud