எங்கள் “தமிழ்விசை“யின் வளர்விலும் உயர்விலும் கருத்துக்கண் ஊன்றி நிற்பவர்களே!
தமிழ்விசை கலைத்துறையிலும் படைப்பிலக்கியத் துறையிலும் தமிழீழக் களத்து நிகழ்விலும் மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற உணர்வின் சமுதாயப் பார்வையிலும் உலகப் பொது நிலையிலும் பிற துறையிலும் உன்னிப்பான ஈடுபாடோடு செயற்பட உங்கள் ஆதரவும் நல்லெண்ணம் உள்ள ஒத்துழைப்புமே தமிழ்விசைக்கு உந்து சக்தியாக அமையும் என்று நம்புகின்றோம்.
தமிழ்விசை வழங்கும் நன்மைகளை எல்லாம் நுகரும் நீங்கள். உங்கள் எண்ணங்களையும் நோக்கங்களையும் போதுமான அளவு இணைத்து கொள்ளுங்கள். உங்கள் நிலை உயர் வாசகங்களும் விமர்சனங்களும் எங்கள் தமிழ்விசை பார்வையில் குவிந்திட வேண்டுகின்றோம்.
உங்களுடைய உயர்ந்த சிந்தனைகளை நாங்கள் கலைகளுடன் சேர்த்துக் கொள்வோம். எங்கள் தமிழ்ப் பண்பாட்டு வளத்துடன் செயல்ப்படுத்துவோம்.
அந்த வகையில் தாயகத்து விடியலின் வீச்சினை நோக்கி மண்ணையும் மக்களையும் நேசித்து எழுவோம். உலகெங்கும் தோன்றி இன்று பிரகாசித்து கொண்டிருக்கும் இணையத்தளங்கள் போல் எங்கள் தமிழ்விசை நற்கருத்துக்களையும் நற்சிந்தனைகளையும் நாளும் பொழுதும் புதிய மெருகுடன் தந்து பணியாற்றும்.
உலக மக்கள்படும் வாழ்வியல் போராட்டங்களையும் விழுமியங்களையும் வீச்சுடன் இணைத்துக் கொள்ளும். நாளும் பொழுதும் உலகியல் போக்கில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை ஏக்கத்தோடு பார்க்கும் உங்களுக்கு தமிழ்விசை ஆக்கக் கருத்துக்களை அள்ளி வழங்கும்.
கலை இலக்கியப் படைப்பாளிகள் உங்கள் படைப்பிலக்கியங்களை தமிழ்விசையில் இடம்பெறத் தரும் பட்சத்தில் தகுந்ததென தேர்ந்து இணைத்துக் கொள்ளப்படும்.
அத்துடன் உங்கள் இல்லங்களில் இடம்பெறும் இனிய நிகழ்வுகளையும் விளம்பரங்களையும் தமிழ்விசையில் இணைத்துக் கொள்ளலாம்!
தொடர்புகளுக்கு – மின்னஞ்சல் – tamilvishai@yahoo.com
தொலைபேசி இலக்கம் – +33 (0)6 69 20 87 79
+33 (0)6 99 32 03 31
நன்றியுடன்
தமிழ்விசை