‘ராஜ ராஜ சோழன்’ திரைப்படத்தில் நடித்த
ஸ்ரீசங்கர்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர் ஸ்ரீசங்கர் அவர்கள் கலைப் பணிக்காக உடலுழைப்பு, நேரம், பணம், இப்படியாக பலவிதத்திலும் தண்ணை அர்ப்பணம் செய்தவர். நடிகவேள் ளடீஸ்-வீரமணி” அவர்களின் நாடகப் பட்டறையில் பட்டை தீட்டப்பெற்று கலைஞர் அன்ரனி-ஜீவா அவர்களின் முள்ளில் ரோஜா, பறவைகள், அக்கினிப் பூக்கள், ஆகிய நாடகங்களிலும் கலைஞர் கலைச்செல்வன் அவர்களின் கொள்ளைக்காரன், ஓர மனிதன் இரு உலகம், போன்ற நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்ற இவர் இலங்கையில் தயாரான மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு, போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவராக இருந்த இவர் சிவாஜி கணேசன் நடித்த தமிழின் முதல் சினிமாஸ்க்கோப் திரைப்படமான ‘ராஜ ராஜ சோழன்’ திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருக்கின்றார்.
இந்தக் கலைஞன் மறைந்து கால் நூற்றாண்டாகிவிட்ட போதிலும் தலைநகர் கொழும்பில் வாழ்கின்ற சக கலைஞர்கள் ஆண்டுதோறும் இவரை நினைவு கூர்ந்து கொள்கின்றார்கள். அது மாத்திரமல்ல இவர் பிறந்த பருத்தித்துறை நகரில் இவருக்கு சிலை வைத்துக் கௌரவித்திருக்கின்றார்கள்.