தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

உதயகுமார்

நாடக, திரைப்படக் கலைஞர்
உதயகுமார்

கொழும்பில் எந்த அரங்கில் யாருடைய நாடகம் நடைபெற்றாலும் அங்கு கலைஞர் உதயகுமார் அவர்களைக் காணலாம். ‘கலைமாமணி” ராஜேந்திர மாஸ்ட‌ர் அவர்களின் ‘மனோரஞ்சித கான சபா”வின் மூலமாக அறிமுகமாகி பல அரங்கங்களைக் கண்டிருக்கும் உதயகுமார் அவர்கள் பல மேடை நாடகங்களை எழுதி இயக்கியுமிருக்கின்றார்.

2005ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தேசிய நாடக விழாவில் சேக்ஸ்பியரின் ‘யூலியர் சீசர்” நாடகத்தில் சீசராக நடித்து பலரின் பாராட்டுதலையும் பெற்ற உதயகுமார் அவர்கள் இலங்கையில் தயாரான கடமையின் எல்லை, மஞ்சள் குங்கும‌ம், சர்மிளாவின் இதயராகம், ஆகிய தமிழத் திரைப்படங்களிலும் சில சிஙகளத் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இன்று அறுபது வயதைத் தாண்டிய போதும் மேடையில் ஏறிவிட்டால் இருபத்தைந்து வயது இளைஞனைப்போல் மாறிவிடும் கலைஞர் உதயகுமார் அவர்கள் இப்பொழுது நாடகங்களை எழுதுவதிலும் இயக்குவதிலுமே கவனம் செலுத்தி வருகின்றார்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud