தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

A.S. இப்றாகீம் .J.P

மூதூர் கலைமேகம்
A. S.  இப்றாகீம் து. j.p

திரு. இப்ராகீம் அவர்களின் பிறப்பிடம் மூதூர் ஆகும். சமூகத்தொண்டரான இவர் சிறந்த விளையாட்டு வீரருமாவார்.

இவர் எழுதிய ‘பைங்கிளியே” என்ற கவிதை 1967ம் ஆண்டு தினபதி பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து வீரகேசரி தினகரன் போன்ற பிரபல பத்திரிகைகள் உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சஞ்சிகைகளில் இவரது படைப்புக்கள் வெளி வந்திருக்கின்றன.

ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளதாக கூறும் கலைமேகம் அவர்களின் ‘தங்கப்பாளம்” என்ற கவிதைத் தொகுப்பு 2003ம் ஆண்டு கலாபூஷணம் ஆ. புண்ணியாமீன் அவர்களது முயற்சியால் சிந்தனை வட்டம் என்னும் எழுத்தாளர் அமைப்பு மூலமாக வெளியானது. இந்தத் தொகுப்பில் இவரது இருபத்தி மூன்று கவிதைகள் பதிவாகியுள்ளது. சமூக சேவை நிறுவனங்களில் பணியாற்றியுள்ள திரு. இப்ராகிம் அவர்கள் தனது படைப்புக்களை நூலாக்குவதே தனது இலட்சியம் எனக் கூறுகின்றார்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud