தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

சீனிவாசகம்-செந்தூரராசா

‘சிற்பக் கலைஞர்’  -சீனிவாசகம்   செந்தூரராசா

யாழ்ப்பாணத்தில் கலைந‌கர் என வர்ணிக்கப்படும் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருவாளர். செந்தூரராசா அவர்கள் தனது பதினாறாவது வயதிலேயே சிற்பக் கலையில் ஈடுபட ஆரம்பித்து சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக சிற்பக் கலையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மாத்தறை, ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களில் கட்டிட வேலைகளையும், (ஸ்தூபி) கோபுர வேலைகளையும், விக்கிரகங்களையும் அமைத்து வர்ணம் தீட்டியும் பொது மக்களின் பாராட்டுக்களைப் பெற்ற இவருக்கு பல ஆலயங்களில் ‘சிற்பக்கலாநிதி’ ‘சிற்பசிகாமணி’ ‘சிற்பசுரபி’ ‘மகா சிற்பசுரபி’ ‘சிற்ப தத்துவநிதி’ ‘சிற்பச் சக்கரவர்த்தி’ ‘சிற்ப வித்தக சிரோன்மணி’ ‘சிற்ப கலாநாயகன்’ ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு பொன்னாடைகளும் போர்த்தி கௌரவிப்புகளும் நடைபெற்றிருக்கின்றன.

இவ்வளவு சிறப்புகளும் உடைய திரு. சீனிவாசகம்-செந்தூரராசா அவர்களுக்கு 2008ம் ஆண்டில் இலங்கை கலாச்சாரத் திணைக்களம் ‘கலாபூசணம்’ விருது வழங்கிக் கௌரவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud